இலங்கை

ஸ்பெஷல் ரிப்போர்ட் ! கொழும்பில் கொல்லப்பட்ட பங்களாதேஷ் பிரதமரின் உறவினர் – அதிரடி கைதுகள் தொடர்கின்றன – தற்கொலைதாரிகள் பெயர்விபரங்கள் வெளிவந்தன !

தொடர்குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இப்போதுவரை 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 362 ஐ எட்டியுள்ளது. காயமடைந்த பலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய சகோதரர்களின் இளைய சகோதரர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.அவரின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்பியூட்டரின் அனைத்து தரவுகளையும் பொலிஸ் கைப்பற்றியுள்ளது .

தெமட்டகொட வீட்டில் இருந்து நவீன கையடக்க தொலைபேசிகள் சில எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. அவை தற்கொலைதாரிகள் பயன்படுத்தபட்டவை என சொல்லப்படுகிறது.

தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவர் லண்டனில் படித்து ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்ற பட்டதாரியாவார்.கண்டி வெல்லம்பட பகுதியை சேர்ந்த ஜெமீல் மொஹம்மட் என்பவரே இவரென அடையாளம் காணப்பட்டுள்ளார் .

வெள்ளவத்தையில் குண்டுடன் ஓட்டோவில் ஏறிய இவர் தெஹிவளைக்கு சென்று அறையொன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.பின்னர் சென் மேரிஸ் தேவாலயத்திற்கு நடந்து வந்து பார்வையிட்டு சென்றுள்ளார். இரண்டு தடவைகள் இவர் நடந்துவந்து சென்றமை சி சி ரி வியில் பதிவாகியுள்ளது. தேவாலயத்தில் சோதனைகள் நடத்தப்பட்டதால் திரும்பி சென்ற இவரை அந்த ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகத்துடன் பார்த்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த அவர் அறைக்குள் சென்று குண்டை வெடிக்கவைத்துக் கொண்டார் என தெரியவந்துள்ளது.

தெமட்டகொடை

வீட்டில் இருந்து சென்ற தற்கொலைதாரிகள் இப்ராஹீம் இல்ஹாம் ,இப்ராஹீம் அசாம் முபாரக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் முபாரக் என்பவர் சிலகாலம் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் தங்கியிருந்து பின்னர் காத்தான்குடி சென்றுள்ளாரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆறுமாத காலம் தலைமறைவாகியிருந்த முபாரக் ,கடந்த 20 ஆம் திகதி இரவு 7.20 மணிக்கு சின்னமன் கிரான்ட் ஹோட்டலுக்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளார்.

மறுநாள் உணவகத்திற்கு வந்து பழங்களை உட்கொண்ட அவர் பின்னர் அங்குமிங்கும் நடந்து சென்று திடீரென வெடிக்கவைத்துள்ளார்.

இந்த ஒட்டுமொத்த சம்பவங்களில் சுமார் 45 சிறுவர்கள் வரை உயிரிழந்துள்ளதாக யுனிசெப் அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் உறவினர் 8 வயது சிறுவன் ஸயன் சௌத்ரி தனது தந்தையாருடன் ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார் .( சிறுவன் படம் இணைப்பு ). பங்களாதேஷ் அரசு தலையிட்டு சிறுவனின் உடலை இன்று டாக்காவுக்கு சென்றதாக தகவல்

(தற்கொலை செய்துகொண்ட தெமட்டகொட இளைஞர் நடத்திய தொழிற்சாலையின் படங்கள்இணைக்கப்பட்டுள்ளன

.)