உலகம்

ஸ்பெயின் அரசுக்கு எதிராக, முன்னாள் தலைவர்களை சுவர் ஓவியமாக வரைந்து நூதன போராட்டம்

ஸ்பெயின் அரசுக்கு எதிராக ஓவியர் ஒருவர் சுவர் ஓவியம் மூலம் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

ஸ்பெயின் அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டதை அடுத்து பொப் பாடகர் பாப்லோ ஹசலை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்திலும், கலவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமைதியான வழியில் போராட்டத்தை நடத்தும் விதமாக ஒவியர் ஒருவர் முன்னாள் ஸ்பெயின் அரசர் ஜுவான் கார்லஸ் மற்றும் முன்னாள் இராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோ ஆகியோரின் சுவர் ஓவியத்தை வரைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

ஓவியரின் புது முயற்சி அந்நாட்டு மக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.