விளையாட்டு

ஷேன் வோர்னின் தொப்பி 12 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

அவுஸ்திரேலிய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் ஷேன் வோர்ன், தான் விளையாடிய காலத்தில் பயன்படுத்திய  தொப்பியை ” ஏலத்தில் விற்பனை செய்துள்ளார்.

இதன்படி நடைபெற்ற ஏலத்தில் ஷேன் அந்த தொப்பியை சுமார் 12 கோடியே 60 இலட்சத்து 79 ஆயிரத்து 670 ரூபாய்க்கு கொமன்வெல்த் வங்கிக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த தொகையானது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வரும் செஞ்சிலுவை சங்கத்துக்கு நேரடியாக சென்று சேரும் என ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் போது பேகி கிரீன் தொப்பி வழங்கப்படுகிறது.

இது அவுஸ்திரேலிய வீரர்களின் பெருமைக்குரிய சின்னமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.