இலங்கை

ஷங்ரி-லா முதல் அலரி மாளிகை வரை ரேஸிங் !

பிரத்தியேக செய்தி !

பிணைமுறி மோசடி கைது விடயத்தில் பரபரப்பு
அலரி மாளிகைக்கு தப்பியோட முயன்ற ரஞ்சன்

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பேர்பேச்சுவல் நிறுவன பணிப்பாளர்  ஒருவரை கைது செய்ய சி ஐ டி பொலிஸார் சென்றபோது அவர் தப்பிச் சென்று அலரிமாளிகையில் தஞ்சமடைய முயற்சி செய்ததாக உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை ஷங்ரி- லா ஹோட்டலுக்கு சென்ற சி ஐ டியினர் ஹுலுகல்ல தங்கியிருக்கும் வீட்டுத் சொகுசு தொகுதிக்கு  செல்ல ஹோட்டல் வரவேற்பறையில் அனுமதி கோரினர்.
இந்த தகவல் ரஞ்சன் ஹுலுகல்லவிற்கு சொல்லப்பட்டது. சி ஐ டியினர் மேலே வர முன்னர் லிப்ட்டில் கீழே இறங்கிய ஹுலுகல்ல தனது லிமோஷன் காரில் ஏறி அலரி மாளிகையை நோக்கிப் பறந்தார்.
இதனை அறிந்த சி ஐ டியினர் அவரை பின்தொடர்ந்தனர்.  ஷங்ரி- லா ஹோட்டலின் பின்பக்கமாக அலரிமாளிகை நோக்கி வேகமாக அவர் சென்றபோதும் ரயில் வந்த காரணத்தினால் ரயில் கடவையில் நிற்க வேண்டியேற்பட்டது.
உடனடியாக காரை வழிமறித்த சி ஐ டி யினர் அவரை கைது செய்தனர். அலரி மாளிகைக்கு தான் செல்லவேண்டுமெனவும்-அமைச்சர் ருவன் விஜேவர்தனை சந்திக்க வேண்டுமெனவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்..
ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்காமல் அவரை கைது செய்தது பொலிஸ்.