உலகம்

வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு; அறுவர் பலிசெக் குடியரசின் ஒஸ்ட்ரோவா நகரில் உள்ள வைத்தியசாலையில் இருந்தவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலைக்குள் நுழைந்த மேற்படி நபர் சுற்றிய அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதனையடுத்து வைத்தியசாலை ஊழியர்களும், பொதுமக்களும் சிதறியோடினர். அதன் பின்னர் தாக்குதலை நடத்திய மர்மநபர் அங்கிருந்து தப்பியோடினார்.

சம்பவம் இடம்பெற்ற பின்னர் பிரதேசத்தில் தேடுதல் நடத்தப்பட்டபோது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.