Breaking News

வைத்தியசாலையின் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த தமிழ் யுவதி ! கொழும்பில் பரிதாபம்

கொழும்பு நவலோக வைத்தியசாலையில் எட்டாம் மாடியில் இருந்து விழுந்த தமிழ் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் அலுவலகத்தில் மனிதவள பிரிவில் உதவி முகாமையாளராக பணிபுரிந்த வத்தளையை சேர்ந்த காருண்யா என்ற 30 வயது இளம் யுவதி இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் தவறி வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது பற்றி பொலிஸ் விசாரணைகளை நடத்தி வருகிறது