இலங்கை

வேற்றுஷா ( Virtusa ) மென்பொருள் நிறுவன ஊழியர் கைதை உறுதிப்படுத்தியது பொலிஸ் !

தகவல் தொழிநுட்ப சேவைகளை வழங்கும் பிரபல சர்வதேச மென்பொருள் நிறுவனமான வேற்றுஷாவின்   ( Virtusa) இலங்கைக் கிளையின் ஊழியர் ஒருவர் அண்மைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் தனது நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட வேற்றுஷாவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஜூலியன் கேரி ரொய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வார முற்பகுதியில் மேற்படி நிறுவனத்தினை பொலிஸார் சோதனையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.