உலகம்

வேர்ஜினியா கடற்கரையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி

அமெரிக்காவின் வேர்ஜினியா கடற்கரையில் கொல்லப்பட்ட 12 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை அங்குள்ள நகரசபை மண்டபத்தில் நுழைந்த துப்பாக்கிதாரி அவர்களை தாக்கி கொன்றார்.
இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்கள் குறித்த மாநகர சபையின் பணியாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவரும் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.