உலகம்

வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு..லித்தியம் – அயன் மின்கல மேம்பாடுகளை செய்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் பி குட்இன்னப் பிரித்தானியாவை சேர்ந்த ஸ்டான்லி விட்டிங்ஹாம் ஜப்பானை சேர்ந்த அகிரா யோஷினோ ஆகிய மூவருக்குமே இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருவரான ஜோன் பி  குட்இன்னப் தனது 97 வயதில் இந்த பெருமையை பெறுதால் இவர்  நோபல் பரிசு வரலாற்றில் வயது கூடிய விருதாளராக பதிவாகியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாதஇ லித்தியம்-இயன் மின்கலங்கள் 1991ஆம் ஆண்டு உலகச் சந்தையில் அறிமுகமான போதிலும் இன்று கைத்தொலைபேசிகள் முதல் மின்னணு வாகனங்கள் வரை பல தளங்களில் தடம் பதித்துள்ளது.

மூன்று விருதாளர்களும் லித்தியம்-இயன் மின்கலங்களை மேம்படுத்தும் வகையில் செய்த சாதனைகளுக்கே இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளால் தான் லித்தியம் அயன் மின்கலங்கள் எடை குறைவானதாகவும் நூற்றுக்கணக்கான முறைகளில் சத்தியேற்றங்களை  செய்தும் பயன்படுத்தவும் முடிவதும் குறிப்பிடத்தக்கது