உலகம்

வேண்டாம் மதமாற்றம் – பாப்பரசர்

வேண்டாம் மதமாற்றம் – பாப்பரசர்

இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள மொரோக்கோவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ், மதமாற்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமென கத்தோலிக்கர்களை கேட்டுள்ளார்.

1985 ஆம் ஆண்டில் புனித பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பருக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இப்போது மொரோக்கோவுக்கு வந்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் – மதமாற்ற முயற்சிகள் தேவையற்ற முட்டுக்கட்டைக்கு வழிவகுக்குமென தெரிவித்துள்ளதுடன் சகவாழ்வையும் வலியுறுத்தியுள்ளார் .

இன்று ரபட்ஸ் தேவாலய திடலில் நடந்த ஆராதனையின் பின்னர் பாப்பரசர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மொரோக்கோவில் புனித பாப்பரசருக்கு விசேட வரவேற்பளிக்கப்பட்டது.