Breaking News

வேண்டாம் என தெரிவித்த பின்னரும் மஹேல விசாரணைப் பிரிவிற்கு வருகைத் தந்தமைக்கான காரணம் என்ன?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவிற்கு இன்று (03) சென்றார்.

எனினும் மஹேல எதுவித வாக்குமூலமும் வழங்காமல் குறித்த விசாரணைப் பிரிவில் இருந்து வௌியேறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு நேற்று (02) மஹேல ஜயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் மஹேல ஜயவர்தனவிடம் இன்று (03) வாக்குமூலம் பதிவு செய்யப்படாது எனவும் அதற்காக வேறொரு தினம் அறிவிக்கப்படும் எனவும் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்திருந்தது.

இன்றைய தினம் வாக்குமூலம் வழங்குவற்கு சமூகமளிக்க வேண்டாம் எனக்கூறிய பின்னரும் மஹேல குறித்த விசாரணைப் பிரிவிற்கு இன்று வருகைத் தந்தமைக்கான காரணத்தை தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்ததாவது:

தனது சொந்த காரணங்களுகாகவே தான் இன்றைய தினம் விசாரணைப் பிரிவிற்கு வருகைதர மறுப்பு தெரிவித்த காரணத்தினாலேயே என்னிடம் இன்று வாக்குமூலம் பெறப்படவில்லை என சில ஊடகங்களில் தவறான செய்திகள் வௌியிடப்பட்டன.

அதனை தொடர்ந்தே அவ்வாறான எந்த காரணங்களும் இல்லை என்பதனை தௌிவுப்படுத்துவதற்காகவே தான் விசாரணைப் பிரிவிற்கு வருகைத் தந்ததாகவும் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினம் வாக்குமூலம் வழங்குவதற்கு சமூகமளிக்க வேண்டாம் என்று நேற்று (02) இரவு 11.30 மணியளவிலே தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதனையடைத்து இன்று காலை சில ஊடகங்கள் சொந்த காரணங்களினாலேயே தான் விசாரணைப் பிரிவிற்கு வருகைத் தரவில்லை என தவறான செய்தியை வௌியிட்டிருந்தன.

எனவே சில ஊடகங்களில் வௌியிடப்பட்ட தவறான செய்திகள் தொடர்பில் தௌிவுப்படுத்த வேண்டியது தனது கடமை என்பதனாலேயே, இன்று தான் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவிற்கு சமூகமளித்ததாக  மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.