Breaking News

வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்தது – ஆட்சேபனைக்கு நேரம் வழங்கினார் தேர்தல் ஆணையாளர் !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ச , சஜித் பிரேமதாஸ , அனுரகுமார திசாநாயக்க உட்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

யாராவது ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பினால் அதனை செய்யலாமென தேர்தல் ஆணைக்குழு அரைமணி நேர அவகாசம் வழங்கியுள்ளது.

41 பேர் கட்டுப்பணம் செலுத்தினாலும் இதுவரை 33 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 3 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதில்லையென அறிவித்துள்ளனர்.

இரண்டு பேர் மீது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

சமல் ராஜபக்ச – மஹிபால ஹேரத் ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தினாலும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என சொல்லப்பட்டது.