Breaking News

வெள்ளவத்தை மோதலில் பொலிஸார் மூவர் உட்பட 6 பேர் காயம் !

 

வெள்ளவத்தை மயூரா பிளேஸில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் , 3 சிவிலியன்களும் காயமடைந்தனர்.

கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றின் தொழிலாளர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இப்போது நிலைமை கட்டுக்குள் கொடுவரப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.