உலகம்

வெள்ளப்பெருக்கால் இந்தியாவில் பெரும் பாதிப்பு

 

இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷின் பெரும் பகுதிகளை பேரழிவுகரமான வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்தியாவில், கிழக்கு மாநிலமான பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் ஆகியவை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இரு மாநிலங்களிலும் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் பருவமழை பெய்ததில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் ஏற்படுத்தியுள்ளது.

வீடுகள் மற்றும் போக்குவரத்து இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பீகாரில் உள்ள முசாபர்பூர் மிக மோசமான பாதிப்புக்குள்ளான இடங்களில் ஒன்றாகும்.

அங்கு கட்டிடங்கள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை வெள்ள நீர் மூடியது.

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான பீகாரில் சுமார் 4.7 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

100,000 க்கும் மேற்பட்ட மக்கள் இப்போது நிவாரண முகாம்களில் வசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாநிலத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான கோசி, “பீகாரின் துக்கம்” என்று குறிப்பிடப்படுகிறது,

ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது அங்கு பேரழிவு வெள்ளம் ஏற்படுகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் பருவமழை தெற்காசியா முழுவதும் அழிவை ஏற்படுத்துகிறது.

கடந்த ஆண்டு புயல்கள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில் இப்பகுதியில் 1,200 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்,

அசாமில், பிரம்மபுத்ரா நதி மற்றும் அதன் துணை நதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பதாக அதிகாரிகள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

துப்ரி மாவட்டத்தில் ஒரு சிறை வெள்ளத்தில் மூழ்கியது,

வெள்ள நீரில் இருந்து தப்பிய 409 கைதிகளும் பெண்கள் கல்லூரிக்கு நகர்த்தப்பட்டனர்.