உஷ்... இது இரகசியம் !

வெளியில் வராத சங்கதிகள் !

 

பாராளுமன்றத்தில் பாம்பு

பாராளுமன்றத்தில் வழமைபோல சோதனையிட்ட விசேட அதிரடிப்படையினர் நேற்று எதிர்க்கட்சி எம் பிக்கள் செல்லும் விறாந்தையில் இருந்த அலுமாரியில் பாம்பொன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த அலுமாரி பாவனையில் இல்லாமல் இருந்ததாக சொல்லும் விசேட அதிரடிப்படை ,இந்த பாம்பினை பின்னர் தியவன்ன ஓய காட்டுக்குள் விட்டனர்.

கவலையில் தலைவர்

மலையக அரசியல் கட்சியொன்றின் தலைவரின் நண்பி ஒருவர் இம்முறை ஆந்திர மாநில தேர்தலில் போட்டியிட்டிருந்தார். அவர் வெற்றி பெற்றால் இந்திய பாராளுமன்றமே தன கையில் இருப்பது போல ஒரு படத்தை இலங்கைக்கு காட்டலாமென அந்த தலைவர் நினைத்திருந்தார்.அதனை தனக்கு நெருக்கமான நண்பர்களிடமும் கூறியிருந்தார்.

ஆனால் நேற்றைய தேர்தலில் தனது நண்பி தோல்வியடைந்துவிட்டதால் மிகவும் கவலையில் இருக்கிறாராம் தலைவர்.நேற்று விசனத்தில் இருந்த அவர், கட்சி முக்கியஸ்தர்களிடம் பேசும்போதுகூட எரிந்து விழுந்தாராம்.

விலைபோகாத பச்சை நிற பல்புகள்

கிரிபத்கொட நகரம் முழுக்க சிங்கள வர்த்தக நிலையங்களை கொண்ட ஒரு இடம்.அங்கு இம்முறை வெசாக் அனுட்டிக்கப்பட்டபோது பச்சை நிற மின்குமிழ்கள் விற்பனையாகாமை குறித்து வர்த்தகர்கள் தமக்குள் பேசிக் கொண்டார்களாம் .அரசின் மீதுள்ள அதிருப்தி காரணமாக மக்கள் இம்முறை கிரிபத்கொட நகரில் பச்சை நிற மின்குமிழ்களை எரிய விடவில்லையென அப்போது தெரியவந்ததாம் .