உலகம்

வெளியாகின சந்திராயனின் படங்கள்

 

இந்தியாவின் சந்திராயன் -2 செய்மதியின படங்கள் முதன்முறையாக வெளிவந்துள்ளன.

நாட்டின் மிக சக்திவாய்ந்த ரொக்கெட் ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் ஏவுதல் வாகனம் (ஜி.எஸ்.எல்.வி) மார்க் 3 ஐ பயன்படுத்தி சிறி ஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 15 ஆம் திகதி இந்த செய்மதி நிலவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

1,000 கோடி இந்திய ரூபாய்கள் செலவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்ரோவர் எனப்படும் நிலவின் தரையில் இறங்கி ஆய்வு செய்யும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிலவின் மேற்பரப்பில் இது தரையிறங்கும்.