இலங்கை

வெளிநாட்டு நீதிபதிகள் வரலாம் – ஆதாரங்களை முன்வைத்தார் சுமந்திரன் !

வெளிநாட்டு நீதிபதிகள் வரலாம் – ஆதாரங்களை முன்வைத்தார் சுமந்திரன் !

இலங்கை மீதான விசாரணைகளுக்காக வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்களென அரசு கூறிவருவதை முற்றாக நிராகரித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் எம் பி , வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கை விவகாரங்களில் தலையிடலாமென ஏற்கனவே 2012 இல் பாராளுமன்றத்தில் விஜேதாச ராஜபக்ச எம் பி முன்வைத்த தனிநபர் பிரேரணையின் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் இடமில்லாவிட்டால் இப்படியொரு சட்டமூலத்தை தனிநபர் பிரேரணையாக கொண்டுவர விஜேதாச ராஜபக்ச எம் பி எப்படி துணிந்தார் என்பதே சுமந்திரன் எழுப்பும் கேள்வியாகும்.