Breaking News

வெளிநாட்டு இலங்கையர்கள் மத்தியிலும் கோட்டாவுக்கு ஆதரவான பிரசாரம் முன்னெடுப்பு !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியிலும் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் முதற்கட்டமாக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இன்று காலை கூட்டமொன்று நடந்தது.

உதய கம்மன்பில எம் பி , சிரேஷ்ட சட்டத்தரணி அலி ஷப்ரி , அஜித் நிவாட் கப்ரால் உட்பட்ட முக்கியஸ்தர்கள் அங்கு மக்களுக்கு விளக்கமளித்தனர்.