உஷ்... இது இரகசியம் !

உஷ் ! – வெளிநாட்டுத் தூதுவர்கள் சந்திப்பை தவிர்த்த முஸ்லிம் அரசியல்வாதிகள்

 

அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் அமெரிக்கா ,இந்தியா மற்றும் சீனத் தூதுவர்களை சந்திக்கவிருந்தனர். ஆனால் இறுதி நேரத்தில் அந்த சந்திப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டன.

வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து பிரச்சினைகளை கூறினால் அது இப்போதிருக்கும் அரசியல் சூழ்நிலையில் தவறான அபிப்பிராயத்தை கொடுக்கலாமெனவும் – உள்ளக பிரச்சினைகளை வெளிநாடுகளுக்கு சொல்ல முஸ்லிம்கள் முயல்வதாக சொல்லப்படலாம் என்பதாலும் இந்த சந்திப்புக்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது .

நேற்று கொழும்பில் ஒன்றுகூடிய முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த முடிவை எடுத்தனர் என சொல்லப்பட்டது.