இலங்கை

வெளிநாட்டமைச்சின் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை – விசாரிக்கக் கோருகிறார் முஜிபுர் எம் பி

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் நெருக்கடி காலத்தில் பாராளுமன்ற மற்றும் சபாநாயகரின் செயற்பாடு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை குறித்து உரிய விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் , சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கடிதம் ஒன்றை சபாநாயகருக்கு அனுப்பியுள்ள அவர்,வெளிநாட்டமைச்சின் அந்த சுற்றறிக்கையால் பாராளுமன்றத்தின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகரின்சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் .