இலங்கை

வெலிக்கடையில் இடம்மாற்றப்பட்ட மரணதண்டனைக் கைதிகள் !

 

வெலிக்கடை சிறைச்சாலை சேப்பல் வார்டில் சி -3 சிறைக்கூடங்கள் திருத்தப்படுவதால் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட கைதிகள் “ எச் ” வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மரணதண்டனை கைதிகள் கடும் பாதுகாப்புடன் இந்த வார்ட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சிறைக்கூடம் மூடப்பட்டு வெளிப்பார்வை மறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மரண தண்டனை பட்டியலில் உள்ள கைதிகளும் இதில் இருப்பதாக அறியப்படுகிறது.

இதற்கிடையில், தூக்குமரத்தின் செயல்பாட்டை சரிபார்க்க மணல்மூடைகள் தூக்கிலிடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.