விளையாட்டு

வெற்றி மழையில் அவுஸ்திரேலியா

 

அவுஸ்திரேலியாவின் விளையாட்டு போட்டிகள் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

ஒரேநாளில் அவுஸ்திரேலியாவின் வீரர்கள் நான்கு முக்கியமான விளையாட்டுப் போட்டிக் வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.

தேசிய அலைச்சறுக்கு போட்டியில் இரண்டு இராட்சத அலைகளை கிழித்து முன்னேறிய அவுஸ்திரேலிய வீரர் சாலி பிட்ஸ்கிபன்ஸ், உலக அலைசறுக்கு வீரர்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தைப்பிடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிரன்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியனான அவுஸ்திரேலியாவின் அஸ்லே பார்ட்டி, இந்த ஆண்டின் மூன்றாவது கிண்ணத்தை கைப்பற்றினார். அவர் 16 வயதிலேயே அவுஸ்திரேலியாவின் முதல்நிலை வீராங்கனையாக தரப்படுத்தப்படவுள்ளார்.

இதனை அடுத்து கொல்ப் தரவரிசையில் 114ம் இடத்தில் உள்ள மற்றுமொரு அவுஸ்திரேலியரான ஹன்னா க்ரீன், மினேசொட்டாவில் நடந்த பிஜீஏ சாம்பியன்ஸிப் போட்டியில் அதிர்ச்சிகரமாக வெற்றிப்பெற்றுள்ளார்.

அதேநேரம் படகோட்டும் உலகக்கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணியின் 8 பேர் தங்கப்பதக்கங்களை வென்றனர்.