விளையாட்டு

வெற்றியுடன் மூன்றாவது போட்டியை எதிர்கொள்கிறது இலங்கைபாகிஸ்தானுக்கு எதிராக முதல்தடவையாக இருபதுக்கு-20  சர்வதேச தொடரொன்றைக் கைப்பற்றிய, உற்சாகத்துடன் இலங்கை அணி அந்த அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இன்று களமிறங்கவுள்ளது.

கடாபி மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது சர்வதேச இருபதுக்கு-20 போட்டியில் 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி, ஒரு போட்டி எஞ்சிய நிலையில் இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது. இந்நிலையில மூன்றாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி, இன்று இரவு 7 மணிக்கு இந்தப்போட்டி, இரண்டாவது போட்டி இடம்பெற்ற கடாபி மைதானத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச இருபதுக்கு-20 தொடரொன்றைக் கைப்பற்றிய முதலாவது அணியாகவும் இலங்கை அணி வரலாறு படைத்தது.

பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி சிரேஷ்ட வீரர்கள் அணியிலிருந்து விலகிக்கொள்ள தசுன் சானக்க தலைமையிலான இளம் இலங்கை அணி இந்த வெற்றியை ஈட்டியுள்ளமை சிறப்பம்சமாகும்.