உலகம்

வெனிஸியுலாவில் தொடர் மின்வெட்டு – வீதிக்கு இறங்கிய மக்கள் !

வெனிஸியூலாவில் இடம்பெறும் தொடர் மின்வெட்டுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் பாதித்துள்ள வெனிஸியூலாவில் தற்போது நடக்கும் தொடர் மின்வெட்டின் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
அத்துடன் எண்ணெய் உற்பத்தி பணிகளிலும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.

அமெரிக்காவின் தலையீடு காரணமாகவே இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்