Breaking News

வெடிகுண்டு தயாரிக்கும் இரசாயனங்களுடன் நால்வர் இரத்தினபுரியில் கைது !

 

டைனமைட் மற்றும் வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட் 105 கிலோ மற்றும் 180 கிராம் கொண்டு சென்றது தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அம்பாறையில் இருந்து இரசாயனங்கள் கொழும்பு கொண்டு செல்லப்பட்டபோது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் பஸ்ஸையும் சோதனை நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.