உலகம்

வீதி நாய்குட்டிக்கு கருணை காட்டி உயிரிழந்த நோர்வே பெண்

நோர்வேயைச் சேர்ந்த 24 வயதான பேர்கிட் களெஸ்டாட் என்ற பெண், ரேபிஸ் வைரஸ் தாக்கி நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவர் தமது நண்பர்களுடன் ஃபிலிப்பின்சிற்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், வீதியில் நடந்த நாய்குட்டி ஒன்றை அவர்கள் தங்கி இருந்த இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
குறித்தநாய் குட்டி அவரை கடித்ததை அடுத்து, அவருக்கு ரேபிஸ் வைரஸ் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
நோர்வேயில் சுமார் 200 வருடங்களின் பின்னர் ரேபிஸ் வைரசால் ஒருவர் உயிரிழக்கும் முதலாவது சம்பவம் இதுவென்று கூறப்படுகிறது.