இலங்கை

வீண்பேச்சு பேசுவோர் அரசியலில் இருக்கக் கூடாது – ரணில் தடாலடி !

“வீணாக அரசியல்கதைகள் பேசி இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றிவிட முடியாது.அப்படிப் பேசித் திரிபவர்கள் அரசியலில் தொடர்ந்து இருப்பதிலும் அர்த்தமில்லை.சிறந்த வேலைகளை செய்யும்போது ஏச்சு வாங்கினால் பரவாயில்லை.ஆனால் வேலை செய்யாமல் ஏசக் கூடாது..”

இவ்வாறு முத்துராஜவலையில் இன்று நடந்த நிகழ்வில் பேசும்போது பிரதமர் ரணில் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு 18 மற்றும் 19 வது அரசியலமைப்பு காரணமென ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்த நிலையில் பிரதமரின் இன்றைய உரை இப்படி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .