உலகம்

விளையாட்டு அரங்கு – வணிக வளாகங்களை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹொங்கொங்கில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் எதிர்ப்பு இயக்கங்கள், விளையாட்டு அரங்கம் மற்றும் வணிக வளாகங்களையும் ஆக்கிரமித்துள்ளளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வணிக வளாகத்தில், சில வினோத நிகழ்வுகளையும் நடத்தியதோடு, ஹொங்கிங்கின் மகிமையை எடுத்துரைக்கும் பாடலையும் பாடியுள்ளனர். இது அந்த இயக்கத்தின் உத்தியோகபற்றற்ற கீதமாக மாறியுள்ளது.

அமைதியின்மையைத் தூண்டிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மீளப்பெறப்பட்டமை, போராட்டக்காரர்களின் வெற்றியாக கருதப்படுகின்றது.

எவ்வாறெனினும், போராட்டக்காரர்கள் முழுமையான ஜனநாயகத்தையும்இ பொலிஸ் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதையும் கோரிக்கையாக முன்வைத்து வருகின்றமையால், அமைதியின்மையை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.

நேற்றைய தினம் இரவு, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹொங்கொங்கில் அமைந்துள்ள வணிக வளாகங்களில் கூடி கோஷங்களை எழுப்பியதோடு, ஹொங்கிங்கின் மகிமையை எடுத்துரைக்கும் பாடலையும் பாடியுள்ளனர்.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டியொன்றின்போது சீன தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

சீன தேசியகீதத்தை அவமதிப்பது சட்டவிரோதமான செயல் என,
2017ஆம் ஆண்டில், சீனா ஒரு சட்டத்தை நிறைவேற்றியதுஇ எனினும் இந்த சட்டம் இன்னனும் ஹொங்கொங்கில் நிறைவேற்றப்படவில்லை.

ஹொங்கொங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான சட்டமூலத்தை அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.