விளையாட்டு

விளாசிய பெயார்ஸ்டோவ், வீணான இமால் உல் ஹக்கின் சதம்

 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆறு விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

முன்னதாக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி இமாம் உல் ஹக்கின் 151 ஓட்டங்களுடன், 358 ஓட்டங்களை குவித்தது.

பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி ஐந்து ஓவர்கள் மீதம் இருக்க, 359 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிகண்டது.

ஜொனி பெயார்ஸ்டோவ் 93 பந்துகளில் 128 ஓட்டங்களைப் பெற்று, இங்கிலாந்தின் வெற்றிக்கு வழியமைத்தார்.

இரண்டாவதாக துடுப்பாடி இங்கிலாந்து கடந்த இரண்டாவது அதிக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை இதுவாகும்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலையில் உள்ளது.

ஓட்டவிபரம்

Pakistan 358-9 (50 overs):

Imam 151, Asif Ali 52,

Woakes 4-67

England 359-4 (44.5 overs):

Bairstow 128, Roy 76, Moeen 46*