Breaking News

விலக வேண்டாம் – முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் வலியுறுத்தல் !

விலக வேண்டாம் – முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் வலியுறுத்தல் !

அரசில் அங்கம் வகிக்கும் பொறுப்புக்களில் இருந்து விலக வேண்டாமென பிரதமர் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் விடாப்பிடியாக நிற்பதால் அரசிலிருந்து வெளியேறுவதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுத்த முடிவு மீள்பரிசீலனையில்..

3.30 மணிக்கு செய்தியாளர் மாநாட்டுக்கு அவர்கள் வரவிருந்தபோதும் தற்போதுவரை பிரதமருடன் கூட்டம் நடைபெறுவதால் செய்தியாளர் மாநாடும் தாமதமாகியிருக்கிறது.

சிரேஷ்ட அமைச்சர்கள் இதனை வலியுறுத்தியபோதும் இன்னும் முடிவில்லாமல் பேச்சு தொடர்வதாக அலரி மாளிகை தகவல்கள் தெரிவித்தன.