விளையாட்டு

விம்பிள்டன்: ஹாலெப் இறுதி போட்டியில்

 

சிமோனா ஹாலெப் தனது முதல் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு தகுபெற்றார்.

எலினா ஸ்விடோலினாவுக்கு எதிராக இடம்பெற்ற அரையிறுதியில் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 13 நிமிடங்களில் வென்றார்.

அவர் சனிக்கிழமை இறுதிப் போட்டியில் ஏழு முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் அல்லது பார்போரா ஸ்ட்ரைக்கோவாவுடன் விளையாடுவார்.

“இது எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாகும்” என்று ஹாலெப் வெற்றியின் பின்னர் கூறினார்.