விளையாட்டு

விம்பிள்டன் : பார்ட்டியும் கேர்பரும் 2ம் சுற்றில்..

 

டென்னிஸ் முன்னிலை வீராங்கனை ஆஷ்லீ பார்ட்டி மற்றும் நடப்பு சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் நுழைந்தனர்.

பிரெஞ்சு ஓபன் சாம்பியனான பார்டி சீனாவின் ஜெங் சைசாயை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.

அவர் இரண்டாம் சுற்றில் பெல்ஜியமை சேர்ந்த அலிசன் வான் யுட்வான்கை எதிர்த்தாடுவார்.

அதேபோல கெர்பர், சக ஜெர்மன் வீராங்கனை டட்ஜானா மரியாவை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

அவர் அடுத்ததாக அமெரிக்காவின் லாரன் டேவிஸை இரண்டாம் சுற்றில் எதிர்கொள்வார்.