விளையாட்டு

விம்பிள்டன்: செரீனாவுடன் ஜோடி சேர்ந்தார் மரே

பிரிட்டனின் டென்னிஸ் வீரர் அண்டி மரே, விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸுடன் ஜோடிசேர்ந்து கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டு முறை ஒற்றையர் சாம்பியனான மரே, இடுப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மீள் திரும்பிய பின்னர் ஒரு மாதத்திற்குள் ஆண்கள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் இரண்டிலும் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.

இந்த ஜோடி நாளை வியாழக்கிழமை முதல் போட்டியை ஒன்றாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.