உலகம்

விமானத்தில் சென்ற தனி ஒரு பயணி !

விமானத்தில் சென்ற தனி ஒரு பயணி !

இத்தாலியின் வில்னியஸ் நகரிலிருந்து பெர்கமோ நகருக்கு சென்ற போயிங் 737 விமானத்தில் ஒரே ஒருவர் மட்டும் பயணித்த நிகழ்வு பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஸ்ட்ரீமிடிஸ் என்ற லித்வேனிய பிரஜை இந்த அனுபவத்தை சந்தித்துள்ளார். 189 பயணிகள் செல்லக் கூடிய ஒரு விமானத்தில் இரண்டு பைலட்மார் ஐந்து பணியாட்களுடன் தனியாக சென்ற இவர் பயணம் முழுவதும் விமானத்தில் செல்பி எடுத்து அங்குமிங்கும் நடந்து திரிந்துள்ளார்.

“ இது எனக்கு ஒரு முடியா அனுபவம் . விமானம் புறப்பட முன் எனக்காக பாதுகாப்பு முன்னறிவித்தலை செய்து காட்டினார்கள்.. அன்று முழுதும் சிரித்துக் கொண்டே இருந்தேன்..” என்றார் ஸ்ட்ரீமிடிஸ்.

2017 ஆம் ஆண்டில் க்ளேஸ்க்கோவில் ஜெட் விமானத்தில் இப்படி தனி ஒருவர் பயனைத்திருந்தார்.