விளையாட்டு

விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மைக்கல் ஸ்லேட்டர்

 

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கட் வீரர் மைக்கல் ஸ்லேட்டர், விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிட்னியில் இருந்து நியுசவுத்வேல்ஸ் செல்லும் விமானத்தில் ஏறும் போது அவர் இரண்டு பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து அவரை விமானத்தில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் அவர் விமானத்தில் இருந்து வெளியேறியதுடன், நடைபெற்ற சம்பவத்தால் அசௌகரியத்துக்கு உள்ளான பயணிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கட் வீரரான அவர் தற்போது பிரபல வர்ணனையாளராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.