உலகம்

விண்கல்லில் தரையிறங்கிய ஜப்பானிய விண்கலம்

 

ஜப்பானிய விண்கலம் ஒன்று தொலைதூர விண்கல் ஒன்றின் தரையை தொட்டுள்ளது.

சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்பதற்கான தடயங்களை கொண்டுள்ளதாக நம்பப்படும் ரியுகு விண்கல்லில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதனை அடுத்து ஜப்பானின் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பெரும் மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.

ஹயாபூசா -2 என்ற இந்த விண்கலம், அங்கிருந்து விண்கற்கள் குறித்த விபரங்களை பூமிக்கு அனுப்புவதுடன், அதன் மாதிரிகளையும் சேகரிக்கும்.