இலங்கை

விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரசியல்வாதிகள் – மைத்ரி ஜப்பானுக்கு – ரணில் கிழக்கு மாகாணத்திற்கு !

புதுவருட விடுமுறைக்காக அரசியல்வாதிகள் பலர் வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க செல்லத் தயாராகி வருகின்றனர்.

பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். மற்றும் பலர் தாய்லாந்து – பேங்கொக் – மலேசியா – அமெரிக்கா – கனடா போன்ற நாடுகளுக்கு செல்லத் தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில் அடுத்த புதன்கிழமை மட்டில் ஜப்பான் நோக்கி தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு குடும்ப உறுப்பினர்களுடன் பயணமாகிறார் ஜனாதிபதி மைத்ரி..

அதேசமயம் பிரதமர் ரணிலும் அடுத்த வார இறுதியில் விடுமுறை ஓய்வுக்காக கிழக்குமாகாணத்திற்கு செல்கிறார்.