இலங்கை

விஞ்ஞாபன வெளியீட்டில் ரணிலுக்கு உரையாற்ற அனுமதி மறுப்பு – சிரேஷ்ட உறுப்பினர்கள் போர்க்கொடி !

 

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் இன்றைய நிகழ்வில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் குறித்து பிரதமர் ரணில் மீது விமர்சனங்கள் இருக்கும் பின்னணியில் அவரை முக்கியமான நிகழ்வுகளுக்கு அழைப்பதன் மூலம் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படலாமென சஜித் தரப்பு கருதுவதாக தெரிகிறது.

சஜித் ஜனாதிபதியானால் தாமே பிரதமர் என்று ரணில் நேற்று முன்னதாக தெரிவித்திருந்தபோதும் நேற்று மாலை கருத்து வெளியிட்டிருந்த சஜித், தமது அரசின் கீழ் மோசடி ஊழல் செய்வோருக்கு இடமில்லையென்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கென சரத் பொன்சேகா அமைச்சராக நியமிக்கப்படுவார் என கூறியதை தவிர வேறு யாரின் பெயரையும் தாம் அறிவிக்கவில்லையென கூறியிருந்தார்.

இந்த பின்னணியில் பிரதமர் ரணிலுக்கு இன்றைய கண்டி கூட்டத்தில் இடமளிக்கப்படாமை குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டு அதனை சஜித் தரப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.