இலங்கை

விசேட செய்தி ! பொன்சேகாவை சந்தித்துவிட்டு கோட்டாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த கனேடியர் !

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இலங்கை படையினரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறி அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் கனேடிய பிரஜை ரோய் சமாதானம் ,இலங்கை வந்து முன்னாள் இராணுவத்தளபதியும் முன்னாள் அமைச்சருமான சரத் பொன்சேகாவை சந்தித்துவிட்டு சென்ற பின்னரே இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிடவுள்ளதாக சொல்லப்படுவதால் அது அந்த தேர்தலில் போட்டியிடவுள்ள ரணிலை பாதிக்குமெனக் கருதி ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துவரும் குழுவின் முக்கியஸ்தரான சரத் பொன்சேகா உட்பட்டோர் இதன் பின்னணியில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதுவரை காலம் இல்லாமல் தேர்தல் காலத்தில் இப்படியான ஏற்பாடுகளை செய்வது கோட்டாவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்கச் செய்யும் வேலையென ஐக்கிய தேசியக் கட்சியின் அந்த தரப்புக்கள் அதிருப்தியையும் வெளியிட்டன