இலங்கை

விசேட செய்தி ! சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் !

ஜனாதிபதி மைத்ரியின் அங்கீகாரத்துடன் அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிக்க இரகசிய நடவடிக்கையை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி குழுவொன்றின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சித் தலைவரும் பிரதமருமான ரணிலை இரகசியமாக சந்தித்து நடந்தவற்றையெல்லாம் விலாவாரியாக விபரித்திருப்பதாக மிக நம்பகரமாக அறியமுடிகின்றது.

யூ என் பி பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சஜித்தை பிரதமராக கொண்ட அரசொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவாதம் வழங்கியதாகவும் அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் விருப்பை பெற தாம் முயற்சித்ததாகவும் சம்பந்தப்பட்ட உறுப்பினர் ரணிலிடம் விபரித்துள்ளார்.

ஆனாலும் இரகசியமாக மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்ப்பினர்களே ஆதரவு வழங்கியதால் எதிர்பார்த்தது நடக்கவில்லையென்று குறிப்பிட்டுள்ள அந்த எம் பி , இதன் காரணமாக உண்மை நிலையை உணர்ந்து கட்சித் தலைமையிடம் உண்மைகளை சொல்ல முன்வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த இந்த பாராளுமன்ற உறுப்பினரின் தகவல்களை கேட்ட பிரதமர் ரணில் ,இந்த விடயத்தை முன்னதாகவே தனக்கு அரச தேசிய புலனாய்வுச் சேவை கூறியிருந்ததென்றும் குறுக்குவழியில் செல்வோருக்கு உரிய நேரத்தில் உரிய படம் கற்பிக்கப்படுமெனவும் தெரிவித்திருக்கிறார் என மேலும் அறியமுடிந்தது .