Breaking News

விசேட செய்தி ! – இலங்கை தாக்குதல்களுக்கு இருமணி நேரத்திற்கு முன் முன்னெச்சரிக்கை விடுத்த இந்திய உளவுத்துறை !

 

இலங்கையில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் இந்திய உளவுத்துறை இலங்கை பாதுகாப்புத்துறையினருக்கு முன்னெச்சரிக்கை தகவலை வழங்கியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது பாதுகாப்பு ஆதாரங்களைக் கொண்டு உறுதிப்படுத்தியதாக கூறி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி ஏப்ரல் 4 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு இந்திய புலனாய்வுத் துறையிடம் இருந்து அறிவுறுத்தல்கள் வந்ததை இலங்கையின் பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.