இலங்கை

விசேட செய்தி ! இனி தேசிய அரசு பேச்சுக்கே இடமில்லை – ரணில் தடாலடி முடிவு !

தேசிய அரசு அமைக்க இனி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதிருக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

மீண்டும் தேசிய அரசமைக்க முன்னதாக தீர்மானித்திருந்த ரணில் அது குறித்து ஜனாதிபதியிடம் அனுமதியினையும் கோரியிருந்தார் .

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகள் ஜனாதிபதி தரப்பில் எடுக்கப்படுவதால் தேசிய அரசை அமைக்கும் முயற்சிகளை செய்யாதிருக்கவும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருப்பதால் அதுவரை பொறுத்திருக்கவும் தீர்மானித்திருக்கிறார் ரணில்.

தனது இந்த முடிவை கட்சியின் சீனியர் உறுப்பினர்களுடன் பகிர்ந்துள்ள ரணில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அரசை அமைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்தால் மட்டும் பரிசீலிக்கலாமென்றும் நுவரெலியாவில் இருந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளார் ரணில்.