இலங்கை

விசேட ஆராதனையில் கலந்து கொண்டார் ஜனாதிபதி மைத்ரி !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற விசேட பிரார்த்தனை இன்று (21) பிற்பகல் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள Cathedral of Christ The Living Saviour தேவாலயத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்குபற்றினார்.

இலங்கை சபையின் பேராயர் டிலோராஜ் கனகசபை ஆண்டகையின் தலைமையில் இச்சிறப்பு பிரார்த்தனை இடம்பெற்றதுடன், திருத்தந்தை பெரி பிரோகியர் (Perry Brohier) மற்றும் ஏனைய திருத்தந்தைகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.