இலங்கை

“விசர் நாய் என்னைக் கடித்தால் நான் திருப்பிக் கடிக்க மாட்டேன் ” – சஜித்துக்கு டோஸ் கொடுத்தார் ரவி

“விசர் நாய் என்னைக் கடித்தால் நான் அதனை திருப்பிக் கடிக்க மாட்டேன்..”

இப்படி அதிரடியாக தெரிவித்திருக்கிறார் மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க. அமைச்சர் சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியிருப்பதாவது,

யாராக இருந்தாலும் துரோகம் செய்யவும் சதி செய்யவும் நாங்கள் இடமளிக்க மாட்டோம்.ஐக்கிய தேசிய கட்சிக்க்கு பிரச்சினையை ஏற்படுத்தவும் விடமாட்டோம்.பலர் பலதையும் சொல்கிறார்கள் என்று அவர்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்க முடியாது.விசர் நாய் என்னைக் கடித்தால் நான் திருப்பி விசர் நாயை கடிக்க மாட்டேன்.

என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் .வாழைச்சேனையில் செய்தியாளர்களிடம் இப்படித் தெரிவித்தார் அமைச்சர் ரவி .