விளையாட்டு

வார்னர் சாதனையை முறியடித்த கெயில்

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் (112 ) 4000 ரன்கள் என்ற வார்னரின் சாதனையை கிறிஸ் கெயில் முறியடித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில், பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கெயில் 6 ரன்களை எட்டிய போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அவர் 112-ஆவது இன்னிங்ஸில் இதனை எட்டியுள்ளார்.

இதன்மூலம், குறைந்த இன்னிங்ஸில் 4000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை கெயில் படைத்துள்ளார். முன்னதாக, டேவிட் வார்னர் 114 இன்னிங்ஸில் 4000 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது.

குறைந்த இன்னிங்ஸில் 4000 ரன்கள் எடுத்த வீரர்கள்:

கிறிஸ் கெயில் – 112 இன்னிங்ஸ்

டேவிட் வார்னர் – 114 இன்னிங்ஸ்

விராட் கோலி – 128 இன்னிங்ஸ்

சுரேஷ் ரெய்னா மற்றும் கௌதம் கம்பீர் – 140 இன்னிங்ஸ்