இலங்கை

வாய்ப்பூட்டு போட்டார் மைத்ரி

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தோ அல்லது ஜனாதிபதி வேட்பாளர் குறித்தோ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பொதுவெளியில் கருத்து வெளியிடக் கூடாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கண்டிப்பான உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

பொதுவெளியில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பொறுப்பின்றி கருத்துக்களை வெளியிடுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்க கட்சித் தலைவர்கள் பலர் ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர உட்பட்ட சிலர் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து அண்மையில் பல கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில் ,இப்படியானவை அரசியல் கூட்டணி அமைப்பது உட்பட்ட பல விடயங்கள் பாதிக்கலாமென இந்த கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது