Breaking News

வட்சப் குழுவின் அட்மின் தர்காநகரில் கைது !

 

தர்காநகர் ப்ரேக்கிங் நியூஸ் என்ற வட்சப் செயலி செய்தி வலையமைப்பை வைத்திருந்த அதன் நிர்வாகி உட்பட மேலும் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வாட்சப் குழுவில் 100 பேர் அங்கத்தவராக இணைந்திருந்ததாகவும் அதனூடாக பரப்பப்பட்ட செய்திகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அழுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

தர்கா நகரில் கைது செய்யப்பட்ட இவர்களை மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.