Breaking News

வாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கைது

வன்னி செய்தியாளர்

வாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்றுவருகின்றது .

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றுவருகிறது .இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் வாக்களிப்பதனை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன .

குறித்த நபர் வாக்களிப்பு நிலையத்திற்குள் வாக்களிப்பது தொடர்பில் புகைப்படம் எடுத்து அதனை ஒரு ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது .அத்தோடு குறித்த நிலயத்தின் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது .