Breaking News

வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியது தேர்தல் ஆணைக்குழு !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வரும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வாக்களிக்க செல்லும்போது எடுத்துவர வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை , கடவுசீட்டு , சாரதி அனுமதிப்பத்திரம் ,அரச ஊழியர் ஓய்வூதிய அடையாள அட்டை , முதியோர் அடையாள அட்டை ,குருமாருக்கான ஆட்பதிவுத் திணைக்கள விசேட அடையாள அட்டை ,தேர்தல் ஆணையகத்தால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை ,ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்படும் படத்துடன் கூடிய விசேட அடையாள அட்டை போன்ற ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஒரு ஆவணத்தை வாக்காளர் கொண்டிருக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது

அதேபோல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

( மேற்படி இரண்டு அறிவுறுத்தல்களும் இணைக்கப்பட்டுள்ளன )