இலங்கை

வவுனியாவில் மீட்கப்பட்ட கண்ணிவெடிகள் குறித்து விசாரணை

வவுனியா மடுக்கந்தையில் நேற்று மீட்கப்பட்ட 13 நிலக்கண்ணிவெடிகள் குறித்து மடுக்கந்தை பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மடுக்கந்தையில் காணி துப்பரவில் பெக்கோ இயந்திரம் ஒன்று ஈடுபடுத்தப்பட்ட சமயம் இந்த கண்ணிவெடிகள் மீட்கப்பட்டன.

விசேட அதிரடிப்படையினரின் கண்காணிப்பின் கீழ் இவற்றை செயலிழக்கச் செய்யும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.